வனவியல்
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம்

தைல மரம்

5

அ. மறுதாம்பு தளிர்கள்
மறுதாம்பு தளிர்களைப் பயிர்பெருக்கத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. மறுதாம்பு தளிர்களைப் பெறுவதற்கு பிப்ரவரி மாதத்தில் 15 செ.மீ மேலிருக்கும் மறுதளிர்களை வெட்டி பூஞ்சான் கொல்லி நேர்த்தி செய்ய வேண்டும்.
மறுதளிர்களை, காலை நேரங்களில் இரட்டைக் கணுக்களுடைய இலைத்துண்டுகளாக வெட்ட வேண்டும். இலைகளை பாதியாக வெட்டி 5000 பி.பி.எம். ஐ.பி.ஏ. கலவையில் நேர்த்தி செய்ய வேண்டும். துண்டுகளின் அடிப்பகுதியை 0.1 % பெவிஸ்டின் அல்லது தகுந்த பூஞ்சான் கொல்லியைக் கொண்டு நேர்த்தி செய்தால் பூஞ்சானிலிருந்து தண்டுத்துண்டுகளைப் பாதுகாக்க முடியும். நேர்த்தி செய்யப்பட்ட தண்டுத்துண்டுகளை தூய்மைப்படுத்தப்பட்ட மண்புழு உரம் நிரப்பிய பிளாஸ்டிக் தட்டில் நட வேண்டும். இதை 80 % ஒப்பு ஈரப்பதத்தோடு பனிப்படல அறையில் வைத்து 30o  செல்சியஸ் வெப்பநிலையில் பராமரித்தால் தண்டுத்துண்டுகள் நன்கு வேர்கள் உண்டாகும். 35 – 45 நாட்களில் நல்ல வேர்களோடு வளரும். பின்பு, இதனை பாலித்தீன் (மண் மற்றும் மணல் கலவை) பைகளில் இடமாற்றம் செய்ய வேண்டும். ஒரு வாரம் வரைக்கும் பனிப்படல அறையிலேயே இதனை வைக்க வேண்டும்.
ஆ.  மிகவும் இளமையான தளிர்கள்
மிகவும் இளமையான தளிர்களை நடுத்தண்டின் அடிப்பகுதியில் உள்ள பகுதியில் வெட்ட வேண்டும். வெயில் காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சேகரிப்பது நல்லது.
இ. முதிரா இளம் போத்துகள்
ஒரு வயதான அடிப்பகுதியில் உள்ள போத்துகளை 100 பி.பி.எம். ஐ.பி.ஏ. கலவையில் முக்கி எடுத்தால் வேர்விடும். மழைக்காலம் தான் இதற்கு ஏற்ற காலம்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016